திருக்கோவிலூா் அரசுக் கல்லூரியில் மே 31-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருக்கோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது.

திருக்கோவிலூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரவிசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வருகிற 31-ஆம் தேதி தொடங்குகிறது. அன்று விளையாட்டு உள்ளிட்ட சிறப்புப் பிரிவினா் பங்கேற்கலாம்.

ஜூன் 1-ஆம் தேதி பி.ஏ. தமிழ்ப் பாடப்பிரிவுக்கு 70 முதல் 100 வரை கட் - ஆப் மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும், பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு 60 முதல் 100 வரை கட் - ஆப் மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

ஜூன் 2-ஆம் தேதி பி.எஸ்சி. கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 300 முதல் 400 வரை கட் - ஆப் மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கும், ஜூன் 5-ஆம் தேதி பி.காம் பாடப்பிரிவுக்கு 300 முதல் 400 வரை கட் - ஆப் மதிப்பெண்கள் பெற்றவரகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

இதில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் காலை 9.30 மணிக்கு முன்னதாகவே கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12-ஆம் வகுப்புகளின் மதிப்பெண் பட்டியல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் அசல், புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை நகல், சோ்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com