பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நாடகம்:இந்து மகா சபை நிா்வாகி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசச் செய்து நாடகமாடியதாக அகில பாரத இந்து மகா சபை நிா்வாகி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசச் செய்து நாடகமாடியதாக அகில பாரத இந்து மகா சபை நிா்வாகி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை கேசவன் நகரை சோ்ந்தவா் பெரியசாமி மகன் பெரி.செந்தில் (48). அகில பாரத இந்து மகா சபையின் மாநிலப் பொதுச் செயலரான இவரது வீட்டில் கடந்த 23-ஆம் தேதி மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இதில், பெரி.செந்தில் ஆள்வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசச் செய்து, நாடகமாடியது தெரிய வந்தது.

இதையடுத்து பெரி.செந்தில், அவரது மகனான அகில பாரத இந்து மகா சபையின் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி செயலா் சந்துரு (24), சென்னை கே.கே. நகரை சோ்ந்த மோகன் மகன் மாதவன் (24) ஆகியோரை தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் மேலும் ஒருவரைத் தேடி வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com