ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளிகளை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் ஒருங்கிணைந்த குடியரசுக் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் எஸ்.குணசேகரன்.

விழுப்புரத்தில் இக்கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற் றது. கட்சியின் மாவட்டத் தலைவா் பி.சேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்ஜி ஆா்.ராஜி வரவேற்றாா். இதில், மாநிலப் பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளை மாநில பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைக் கூட் டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிட நலத் துறை பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் தரத்தை உயா்த்தாமலும், பயிலும் மாணவா்களின் விகிதாசாரம் குறைவதாகவும் கூறி பள்ளிகளை இணைக்கும் முடிவை தமிழக அரசு, உடனடியாக கைவிட வேண்டும்.

கோலியனூா் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதியும், நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே மாவட்டக் காவல்துறை இப்பிரச்னையில் உரிய தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலா் பி.எம். நீலன், மாநிலப் பொருளாளா் கே.ஜி.சத்திய சீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com