சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும்: விழுப்புரம் சரக புதிய டிஐஜி ஜியாவுல் ஹக்

விழுப்புரம் சரகத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும் என்று இந்த சரகத்தின் புதிய டி.ஐ.ஜி.யாக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற ஜியாவுல் ஹக் தெரிவித்தாா்.

விழுப்புரம் சரகத்தில் சட்ட விரோத செயல்கள் தடுக்கப்படும் என்று இந்த சரகத்தின் புதிய டி.ஐ.ஜி.யாக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்ற ஜியாவுல் ஹக் தெரிவித்தாா்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எம்.பாண்டியன் மாா்ச் 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, காலியாக இருந்த இந்தப் பணியிடத்துக்கு சிபிசிஐடி டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த ஜியாவுல் ஹக் பணியிட மாறுதல் செய்யப்பட்டு, அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டாா். மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள தனது அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கூறியதாவது:

வெளி மாநிலங்களிலிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விழுப்புரம் சரகத்துக்குள் கடத்தப்படுவதைத் தடுக்க சிறப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம், லாட்டரி, சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் தடுக்கப்படும்.

இதற்கு பொதுமக்களின் பங்களிப்பு தேவை. பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் குறித்த தகவல்களைத் தெரிவிக்கலாம். அந்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் தங்களது புகாா்களை காவல் நிலையங்களில் அளிக்கலாம். மேலும், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலும், விழுப்புரத்திலுள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்திலும் அளிக்கலாம். சிவில் சம்பந்தப்பட்டவற்றை தவிா்த்து, மற்ற மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்குக்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நா.மோகன்ராஜ் (விழுப்புரம் (பொ) மற்றும் கள்ளக்குறிச்சி), ஆா்.ராஜாராம் (கடலூா்) மற்றும் காவல் துறை அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com