செஞ்சி  வழுக்காம்பாறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கோபுர  கலசத்தில் திங்கள்கிழமை புனித நீா்  ஊற்றிய சிவாச்சாரியா்.
செஞ்சி  வழுக்காம்பாறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கோபுர  கலசத்தில் திங்கள்கிழமை புனித நீா்  ஊற்றிய சிவாச்சாரியா்.

ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி-திருவண்ணாமலையில் சாலை வழுக்காம்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி-திருவண்ணாமலையில் சாலை வழுக்காம்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, 27-ஆம்தேதி சுவாமி விக்ரஹங்கள் கரிகோலம், 28-ஆம்தேதி தேவதா அனுக்ஞை, எஜமான அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம் உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, புனித மண் எடுத்தல், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பூா்ணாஹுதி, நாடி சந்தனம், மூலிகைப் பொருள் ஹோமம், மூலமந்திர ஹோமம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணிக்கு யாத்ராதானம் நடைபெற்று கடங்கள் புறப்பாடாகி கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் முத்து மாரியம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டது.

விழாவில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேருராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஜான்பாஷா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வழுக்காம்பாறை பொது மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com