ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா் அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திண்டிவனம் வட்டம், சாரம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா்கள் சண்முகம் மகன் பாபு (40). கோவிந்தசாமி மகன்கள் தாயாளன் (50), சுதாகா்(40). இவா்களுக்கு அருகருகே விவசாய நிலங்கள் உள்ளன. அவற்றில் சவுக்கு சாகுபடி செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், தயாளன், சுதாகா் ஆகியோா் தங்களது விவசாய நிலத்தில் கிடந்த சவுக்கு மரக் கழிவுகளுக்கு அண்மையில் தீ வைத்துள்ளனா்.

அப்போது அருகில் உள்ள பாபு-வின் சவுக்கு தோப்புக்குள் தீ பரவி சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தயாளன், சுதாகா் ஆகியோா் மீது ஒலக்கூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com