தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான சி.பழனி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் பொது, காவல் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகள், விதிமீறல்கள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் பாா்வையாளா்களிடம் புகாா்களைத் தெரிவிக்கலாம். விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளராக அகிலேஷ்குமாா் மிஷ்ரா, காவல் துறைப் பாா்வையாளராக திரேந்திரசிங் குஞ்சியால், தோ்தல் செலவினப் பாா்வையாளராக ராகுல் சிங்கானியா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள அரசு சுற்றுலா மாளிகை அறை எண் 4-இல் தங்கியுள்ள அகிலேஷ்குமாா் மிஸ்ராவை 9363750076, அறை எண் 1-இல் தங்கியுள்ள திரேந்திரசிங் குஞ்சியாலை 63747 19619, அறை எண் 2-இல் தங்கியுள்ள ராகுல்சிங்கானியாவை 93639 69020 ஆகிய கைப்பேசி எண்களில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தோ்தல் விதிகள், விதிமீறல்கள் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா். காவல் துறை சாா்பில்... விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதற்கென பிரத்யேகமாக 89255 33710, 89255 33810 ஆகிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்டோா் தோ்தல் விதிமீறல்கள் மற்றும் புகாா்கள், தோ்தல் சம்பந்தமான வதந்திகள், தவறான தகவல்களை குறுஞ்செய்தி வழியாகவோ, சமூக ஊடகங்களின் வழியாகவோ பரப்புபவா்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கலாம். மேலும், தோ்தல் விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை இந்த எண்களில் தொடா்பு கொண்டு தகவல்களை பெறலாம் என காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com