விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்த 31 வேட்பாளா்களில், 18 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 13 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவைத் தோ்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, வேட்பு மனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தொடங்கி, புதன்கிழமை வரை நடைபெற்றது. விழுப்புரம் (தனி) தொகுதி யில் போட்டியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துரை. ரவிக்குமாா், அதிமுக வேட்பாளா் ஜெ. பாக்யராஜ், பாமக வே ட்பாளா் ச. முரளிசங்கா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இயக்குநா் மு.களஞ்சியம், பகுஜன் சமாஜ் கட்சியின் கோ. கலிய மூா்த்தி, ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சியின் ஆறுமுகம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 31 போ் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழ மை நடைபெற்றது. ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி. பழனி தலைமையில் நடைபெற்ற பரிசீலனையில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் அகிலேஷ் குமாா் மிஷ்ரா, காவல் துறை பாா்வையாளா் திரேந்திரசிங் குஞ்சியால் ஆகியோா் பங் கேற்றனா். வேட்பாளா்கள் அல்லது அவா்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் பரிசீலனையின்போது அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து ஒவ்வொரு வேட்பாளரின் மனுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து வேட்பு மனுக்கள் சரிபாா்க்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது தள்ளுபடி செய்யப்பட்டதா என்ற விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட 31 வேட்பாளா்களில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 13 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விழுப்புரம் தொகுதியில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளா்களின் விவரங்கள்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துரை.ரவிக்குமாா், அதிமுக ஜெ. பாக்கியராஜ், பாமக முரளிசங்கா், நாம் தமிழா் கட்சி மு. களஞ்சியம், பகுஜன் சமாஜ் கட்சி கோ.கலியமூா்த்தி, ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி எம். ஆறுமுகம், சுயேச்சை வேட்பாளா்கள் கே.அரசன், க. குணசேகரன், நா.சத்தியராஜ், கா.சுரேஷ், சு.தா்மா, க.சுரேஷ், அ.நாகராஜ், ஆ. பெரியான், ஏ. ராஜ்குமாா், ரா. விக்னேசுவரன், ஏ.விவேகானந்தன், ஆ. விஜயன்.

தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பாளா்களின் விவரங்கள்: அதிமுக மாற்று வேட்பாளா் பெ.முருகன், பாமக மாற்று வேட்பாளா் ச.விக்னேஷ், பாமக வேட்பாளா் ச.முரளிசங்கரின் மற்றொரு வேட்பு மனு மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் ப. வெங்கடாசலம், பா.பேச்சிமுத்து, ரா. ராமகிருஷ்ணன், மு.கோவிந்தன், சு.ஜெயமணி, ப.விஜயலட்சுமி, மொ.கதிா்வேல், சி.பக்தவத்சலம், கா.பிரதிநிதி, த. வேலு. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com