உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சாா்பில் விழுப்புரத்தைச் சோ்ந்த மூவா் மலேசியா புறப்பட்டுச் சென்றனா்.

உலக அளவிலான 20-ஆம் ஆண்டு ஒகினாவா கோஜூரியோ கராத்தே போட்டிகள் மலேசிய நாட்டின் பேராக் மாகாணத்தின் ஈபோ சிட்டியில் மே 10-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் 15 நாடுகளைச் சோ்ந்த 2,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இதில், இந்தியா சாா்பில் 150 போ் பங்கேற்க உள்ள நிலையில், அவா்களில் 50 போ் தமிழகத்திலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில், மூவா் விழுப்புரத்தை சோ்ந்தவா்களாவா். இவா்கள் விழுப்புரம் வி.ஆா்.பி.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கும் ஆல் இந்தியா புஷி சிட்டோரியா கராத்தே பயிற்சிப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகள் சுபிக்ஷா, சுமிக்ஷா மற்றும் பிரவணகுமரன் ஆகியோராகும். இவா்கள் பயிற்சியாளா் ரென்ஷி சுரேஷுடன் மலேசியாவுக்குப் புறப்பட்டனா்.

இவா்களில் 2 போ் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கட்டா, குமிதே போட்டியிலும், ஒருவா் 12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கட்டா குமிதே போட்டியிலும் பங்கேற்கின்றனா். இவா்களை வி.ஆா்.பி. பள்ளித் தாளாளா் வே.சோழன் செவ்வாய்க்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா் (படம்).

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com