வேட்பாளர் 33.3 % வாக்குகள் பெற்றால்தான் வெற்றி

உங்கள் பதவிக்காலத்தில் நீங்கள் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்கள் என்ன?
வேட்பாளர் 33.3 % வாக்குகள் பெற்றால்தான் வெற்றி

உங்கள் பதவிக்காலத்தில் நீங்கள் கொண்டு வந்த தேர்தல் சீர்திருத்தங்கள் என்ன?

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை நாடு முழுக்கப் பயன்படுத்தியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் கல்வித் தகுதி, சொத்து முதலியவற்றை "அபிடவிட்' மூலம் தாக்கல் செய்தாக வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தியது. வாக்காளர் பட்டியலைப் புகைப்படத்துடன் தயாரித்தது ஆகியவை எனது பதவிகாலத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள்

தேர்தல் சீர்திருத்தத்துக்கு உங்கள் பரிந்துரைகள் என்னென்ன?

ஜூலை 2004-இல், பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், கிரிமினல் குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஐந்து வருடங்களுக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு என்று தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்குக் கொடுக்கும் நிதியை, காசோலையாக மட்டுமே கொடுக்க வேண்டும்.

தேர்தலுக்காகக் கட்சிகளுக்குக் குறிப்பிட்ட நிதி உதவியை அரசே செய்யவேண்டும். பெரும் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

தேசிய தேர்தல் நிதி என்று உருவாக்கி, அதிலிருந்து வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவுக்கான நிதியை அளிக்க வேண்டும். அதனால் நிதி வசதி இல்லாத ஒருவர்கூடத் தேர்தலில் போட்டியிட முடியும்.

தற்போதுபோல் அல்லாமல், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 33.33 சதவிகித வாக்குகளாவது பெற்றிருந்தால்தான் அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கவேண்டும்.

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் நிலையில் தேர்தல் முடிவு எவ்வாறு இருக்கும்?

எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக நோட்டாவை அறிமுகப்படுத்தினோம். ஆனால் 50 சதவிகித வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானால் இரண்டாவது முறையாகத் தேர்தல் நடத்தியாக வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்படவேண்டும்.

இதுபோல், தேர்தல் ஆணையத்துக்கு என்று தனி பட்ஜெட் தேவை. நிதித் தன்னாட்சி உரிமை அளிக்கப்பட வேண்டும். இப்போது சட்டத் துறையின் ஓர் அங்கமாக இந்தச் செலவு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உள்ள குறைகளை நீக்க என்ன செய்ய வேண்டும்?

கட்சி மாறுதல் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அவற்றிலுள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் தேர்தல் மனுக்களை 45 நாள்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com