கருணாநிதியின் கபட நாடகங்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஜெயலலிதா

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் கருணாநிதி போடும் இரட்டை வேடங்களையும், மதுவிலக்கு குறித்து கருணாநிதி போடும் கபட நாடகங்களையும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று
கருணாநிதியின் கபட நாடகங்களை மக்கள் ஏற்கமாட்டார்கள்: ஜெயலலிதா
Updated on
13 min read

இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் கருணாநிதி போடும் இரட்டை வேடங்களையும், மதுவிலக்கு குறித்து கருணாநிதி போடும் கபட நாடகங்களையும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

திருச்சி பொன்மலை ரயில்வே ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின் வாயிலாக திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 67 சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உங்களிடம் அவர்களுக்காக வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்; மக்களாட்சியை மலரச் செய்ய வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்டேன்.  நீங்களும் என்னுடைய வேண்டுகோளினை ஏற்று அதிமுவை ஆட்சியில் அமர்த்தினீர்கள்.

உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். மாற்றம் தந்த உங்கள் வாழ்வில் ஏற்றம் தந்த அரசு தான் எனது தலைமையிலான அதிமு அரசு.

நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தேர்தலின் போது உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ; என்னென்ன திட்டங்களை தருவேன் என்று சொன்னேனோ அதையெல்லாம் நிறைவேற்றித் தந்து இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி விலையில்லாமல்  வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதன் பயனை நீங்கள் எல்லாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் ரூபாய் வரை ஒரு குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.  கடந்த ஐந்தாண்டுகளில் 3,256 கோடி ரூபாய் செலவில் 14.3 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நவீன பசுமை வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தேன். கடந்த ஐந்தாண்டுகளில் 5,879 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,79,954 பேர்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 20,046 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இருண்ட தமிழகம் ஒளி பெற வழிவகை செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளித்து இருந்தேன்.  கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து திட்டங்களின் மூலம் 7,485.50 மெகாவாட் மின்சாரம் தமிழக மின் தொகுப்பில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி சென்ற தேர்தலின் போது என்னால் அளிக்கப்பட்டு இருந்தது.  இதன்படி கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு பயனாளிக்கு 4 ஆடுகள் வீதம் 7 லட்சம்  பயனாளிகளுக்கு 927.75  கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 லட்சம் ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளன. 

இதே போன்று 60,000 விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். அந்தத் திட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் 231.11 கோடி ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மீன் உற்பத்திக்கு உகந்த வழியில் மீன் பிடிக்க விலக்கு அளிக்கப்படும்

45 நாட்களுக்கு மீனவக் குடும்பத்திற்கான உதவித் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. பருவ காலத்தால்

4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத மீனவக் குடும்பங்களுக்கு 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்  என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.  காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நிலையான தீர்வு எட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்ததற்கிணங்க, அணையின் நீர்மட்டம் 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அணை வலுப்படுத்தப்பட்ட பின் அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.

கேபிள் டி.வி. தொழில் அரசுடைமையாக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி. இணைப்பு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.  இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு அனைத்து மக்களுக்கும் மாதம் 70 ரூபாய் என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000 ரூபாய் உதவித் தொகையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் என்றும்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன் திருமண உதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 72 ஆயிரத்து 643 பெண்களுக்கு 2,537 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதியுதவியும் 2,844 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

முதியோர் உடல் ஊனமுற்றோர் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான மாத உதவித் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவையெல்லாம் நான் செய்வேன் என்று சொன்ன வாக்குறுதிகள். நான் சொன்னதைச் செய்தேன். இவை மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளேன். நான் சொல்லாத நீங்களே எதிர்பார்க்காத பலவற்றையும் செய்துள்ளேன்.  மக்களை நாடி அரசு என்பதற்கேற்ப ``அம்மா திட்டம்'' இன்று மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஏழை மக்கள் மலிவு விலையில் தரமான உணவை வயிறார உண்ணும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 530 ``அம்மா உணவகங்கள்'' திறக்கப்பட்டுள்ளன.  இதே போன்று அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா குழந்தைகள் பரிசுப் பெட்டகம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு என்பதை உங்களுக்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.

 ஆனால் தி.மு.க-வினர் 2006-ஆம் ஆண்டு தங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. நான் அவர்கள் நிறைவேற்றாத 5 வாக்குறுதிகளை 18.4.2016 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தேன். தற்போது நான் மேலும் சிலவற்றை உங்களிடம் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

வட்டார அளவிலான மூலப் பொருட்களை கணக்கிட்டு தொழில்கள் நிறுவப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று? அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளிலும் கணினி பயிற்சி என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா?  மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு கட்டணம் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?

முதுநிலை மருத்துவ படிப்பில் தமிழ் நாட்டு கல்லூரி பட்டதாரிகள் மற்றும் தமிழ் நாட்டில் பணிபுரியும் மருத்துவர்கள் மட்டுமே 100 விழுக்காடு சேர்த்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி தண்ணீரில் எழுதிய வாக்குறுதி தானா? 

கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதா? 

கல்வியை மாநிலப் பட்டியலில் இடம் பெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  இதை நிறைவேற்ற திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிடம் வேண்டுகோளாவது வைத்தார்களா? இப்படித் தான் திமுக, தனது 2006-ஆம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. வாக்காள பெருமக்களே! இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இந்த ஜெயலலிதா தான். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுபவர் தான் திரு. கருணாநிதி.

விவசாய மேம்பாட்டுக்காக உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்து, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது.

சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், தரமான விதைகள் இதர இடுபொருட்கள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, உணவு தானிய உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகளை நாம் படைத்து வருகிறோம். உரங்கள் மற்றும் வேளாண் கருவிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழி வகை செய்யும் வகையில், உரங்கள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக, TANFED நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.  குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் பெறும் அளவில் நுண்ணீர் பாசனத்திற்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 

பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 5,695 ஏரிகளில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், நீரியல் கட்டுமானங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் 2,870 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன.  198 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

47 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

66 உபவடி நிலங்களில் 4,778 ஏரிகளை சீரமைத்தல் மற்றும் ஆற்றுப் படுகைகளை மேம்படுத்தி  477 புதிய அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள்  கட்டுதல் போன்ற பணிகள் உலக வங்கி கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும்.  இதற்கென 2,950 கோடி ரூபாய் திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.  குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்படுகிறது. 

கடந்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 24,621 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில், 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் 9,164 கோடி ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்படி 829 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன்  இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரித்து கையாள விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. “வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மற்றும் எந்திரங்கள் பழுது நீக்கும் சேவை மையங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளால் தான் கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் அதாவது 2010-11-ஆம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தி 75.95 லட்சம்  மெட்ரிக் டன் தான் என்ற நிலையில், 2014-15-ஆம் ஆண்டில் இது 1 கோடியே 27 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் என அதிகரித்துள்ளது. அதாவது உணவு தானிய உற்பத்தி 68.46ரூ அதிகரித்துள்ளது.  எனவே தான், அதிக உணவு தானிய உற்பத்தி, அதிக பயறு வகை உற்பத்தி, அதிக சிறு தானிய உற்பத்தி என மூன்று முறை மத்திய அரசின் ‘கிருஷி கர்மான்’ விருதை நாம் பெற்றுள்ளோம்.

அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக் கடன் பெற்று விலை ஏற்றத்தின் போது விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,492 புதிய கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. 

விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்  மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் ``முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்'' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் குத்தகைதாரர்கள் விவசாய தொழிலாளர்கள் என அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 37 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 3,767 கோடி ரூபாய்  அளவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

விவசாயிகள் தற்கொலை பற்றி தி.மு.க-வினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  ஒரு விளம்பரத்தில் உர விலை உயர்வு பற்றியும், விவசாயிகள் தற்கொலை பற்றியும் திமுக தெரிவித்துள்ளது.  உரங்களின் விலை உயர்வுக்கு யார் காரணம்? மக்கள் மறந்திருப்பார்கள் என்று திமுக தப்புக் கணக்கு போடுகிறது.  திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தானே உர விலைகளை உயர்த்தியது?  அதற்கு வழி வகுத்த அமைச்சரவை கூட்டத்தில் திமுக-வைச் சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பங்கேற்று ஒப்புதல் அளித்தாரா? இல்லையா? 

உரம் விலைகள் ஏற்றத்திற்கு காரணமாக இருந்து விட்டு, அனைத்திந்திய அதிமு அரசு, உர விலையை ஏற்றியது போல விளம்பரம் செய்வது எவ்வளவு மோசடியான செயல்?

கடந்த திமுக ஆட்சியில், 2009-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1060.  2010-ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 541.  கடந்த 2014-ஆம் ஆண்டு இது  68 என குறைந்துள்ளது. இந்த தற்கொலைகளும் பல்வேறு குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்டதாகும். 

திமுக-வின் பொய்ப் பிரச்சாரத்தைப் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

திமுக-விற்கு இந்தத் தேர்தலில் தாங்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை என்பதும், அதிமு வேட்பாளர்கள் தான் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இரண்டாம் இடத்திற்குக் கூட வர முடியாது என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. எனவே தான், தங்கள் வசமுள்ள ஊடகங்கள் வாயிலாக பலவித பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக-வினர் மேற்கொள்ளும் பலவகை பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்ட ஜோடித்த நாடகங்கள் தான். தங்களை உயர்த்திக் காட்டும் வகையில் இது போன்ற நாடகங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அதிமு வேட்பாளர்களுக்கு எதிராக, ஒரு சில இடங்களில் மக்கள் உள்ளனர் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முனைந்துள்ளனர். 

திமுக-வைச் சேர்ந்த ஒரு சிலரை நிறுத்தி வைத்து, அதிமு வேட்பாளர்களை கேள்விகள் கேட்பது போல் நாடகமாடி, அந்த பொய்ச் செய்திகளை அவர்களது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். நாடகக் காட்சியைப் போல, பட்டுப் புடவை அணிந்து வயல்வெளியில் கூலி வேலை செய்யும் மகளிருடன் திரு. கருணாநிதியின் தனயன் உரையாடிய கூத்துக்களை எல்லாம் பார்த்த தமிழ் நாட்டு மக்களுக்கு, திமுக-வின் மோசடி பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி நன்றாகவே தெரியும். 

எனவே, அனைத்திந்திய அதிமுவைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில், திமுக-வினர் நடத்தும் நாடகங்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.  இதிலும் ஏமாறப் போவது திமுக தான்.  மக்கள் என் பக்கம் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் திமுக-வை, தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி ஒரு சில கருத்துகளை உங்களோடு பகிரந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, இலங்கை தமிழர் பிரச்சனையில் பல

கபட நாடகங்களை ஆடி இலங்கை தமிழருக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது.  பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை நாட்டிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் அங்கு வசிக்கும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். 

எனவே தான், இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து 1980-களிலிருந்து பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகள் ‘சுயாட்சி அந்தஸ்து”, ‘தனி ஈழம்’ என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தன.  2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்று கொண்டார்.  இங்கே தமிழ் நாட்டில் 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. 

ஆட்சிக்கு வருவதற்கு முன் 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘ஈழத் தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழி காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவர்கள் செய்தது என்னவோ இதற்கு எதிர்மறையான செயல்களைத் தான். 

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியிலே நடைபெற்று வந்தது.  இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. இவை அனைத்தும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக-விற்கு நன்கு தெரியும்.  இருப்பினும், கருணாநிதி இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்தியாவிடமிருந்து ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை, 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும் இலங்கை தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. 

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பல முறை வற்புறுத்தினேன்.  ஆனால் இதை செய்வதற்கு மனம் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் திரு. கருணாநிதி எடுக்கவில்லை. 

மக்களை ஏமாற்றும் விதமாக  ``அனைத்துக் கட்சிக் கூட்டம்'', ``சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்'', ``தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்'', ``மனித சங்கிலி போராட்டம்'', ``பிரதமருக்கு தந்தி'', ``நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா''

என்ற வெற்று அறிவிப்புகளுடன் ராஜிநாமாக் கடிதங்களை தானே பெற்று வைத்துக் கொண்டது; ``இறுதி எச்சரிக்கை'' என்ற அறிவிப்பு என பல்வேறு நாடகங்களை நடத்தி,

இறுதி நாடகமாக ``போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்'' என்று அறிவித்து கடற்கரையில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக படுத்துக் கொண்டு உண்ணாவிரத  நாடகத்தை முடித்துக் கொண்டார். 

அவ்வாறு முடிக்கும் போது, ``விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டு விட்டது'' என்ற செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார் திரு. கருணாநிதி.  போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று இவரது பேச்சைக் கேட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்தனர். இலங்கை ராணுவம் அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. 

குண்டு மழைக்கு விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் கூட குண்டுகள் வீசப்பட்டு தமிழர் இனப் படுகொலை நடத்தப்பட்டது.

3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட திரு. கருணாநிதி, இலங்கையில் தமிழர்களின்  மீதான போரை நிறுத்தி விட்டதாக மத்திய அரசு தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தான் அவ்வாறு ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லி வந்தார். 

உயிர் பிழைத்த தமிழர்கள் எவ்வித வசதியும் இல்லாமல் ராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெற்றது. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திரு. கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு  சென்று, அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்துண்டு பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு இந்தியா திரும்பி, இலங்கை தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டனர்.

சில மாதங்களுக்கு முன்  இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் இறுதிப் போர் உச்சகட்டத்தில் இருந்த 2009-ஆம் ஆண்டு

மே 16-ந் தேதி இரவு திரு. கருணாநிதியின் மகள் கனிமொழியிடம், தனது கணவர் சசிதரன் ளுயவநடடவைந போனில் பேசியதாகவும், அப்போது திருமதி கனிமொழி, அவர்களை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாகவும் சர்வதேச அளவில் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். அதை நம்பியே சரணடைந்த ஈழத் தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போய் விட்டனர்

என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இங்குள்ள தமிழருக்கு மட்டுமல்லாமல் இலங்கை தமிழருக்கும் இவ்வாறு துரோகம் இழைத்தவர் தான்

கருணாநிதி.

2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அதிமு ஆட்சி பொறுப்பேற்ற பின், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு

நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கைப் போரின் போது போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் நிகழ்த்தியவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திட ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் உச்சி மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், இனப் படுகொலை செய்தவர்கள் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு மூலம் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் என்னால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இலங்கை தமிழர்கள் மீது போர் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், உதவிகளையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்து வருகிறது.  அகதிகளாக இங்கே வந்த இலங்கை தமிழர்களுக்கு பிறந்து இங்கேயே கல்வி கற்றவர்களும் இருக்கிறார்கள்.  இவர்களையெல்லாம் இலங்கைக்கு  திருப்பி அனுப்பிட மத்திய அரசு முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எனது அரசு தான்.  இலங்கையில் நிலைமைகள் முற்றிலும் சீரடைந்து முழுப் பாதுகாப்பு ஏற்பட்ட பின்னரே இங்குள்ள இலங்கை தமிழர்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை.  இங்கே உள்ள இலங்கை தமிழர்கள் வேலை வாய்ப்புகளை எளிதில் பெரும் வகையில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்துவோம்.

திமுக-வும், காங்கிரஸும் சேர்ந்து இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணமாக இருந்து விட்டு, பின்னர் ஏற்பட்ட ஏதோ பிரச்சனையால் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, ``ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை'' என்று கூறினார். 

காங்கிஸுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், ``கூடா நட்பு கேடில் முடியும்'' என்றெல்லாம் பேசி காங்கிரஸிலிருந்து  பிரிந்த திரு. கருணாநிதி, தனது மகள் கனிமொழி மாநிலங்களவையின் உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக காங்கிரஸின் ஆதரவை கேட்டுப் பெற்றவர் தான்.

பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போது தனக்கு பயன்பட மாட்டார்கள் என்பதால் காங்கிரஸை வெட்டி விட்டவர் தான் திரு. கருணாநிதி.  தற்போது காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார் திரு. கருணாநிதி என்றால், 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது வேறு காரணங்களுக்காகத் தானே? இது போன்ற கபட நாடகங்களை எல்லாம் நடத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என திரு. கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.

முந்தைய  மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதே, ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போன திரு. கருணாநிதி, இப்போதைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்தி செயல்படுத்த வேண்டுமென தி.மு-கழகம் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறியிருப்பதை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

மதுவிலக்கை பற்றி இப்பொழுது அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  அதைப் பற்றி சில கருத்துகளை நான் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன்.

எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். 

முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.  பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்.

தி.மு.க-வினர் மதுவிலக்கு அமல்படுத்தப் போவதாக பொய்யான வாக்குறுதியை

அளித்து வருகின்றனர். முந்தைய தி.மு.க.  ஆட்சியின் போது மது விற்பனை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்தது. இவர்களா மதுவிலக்கை கொண்டு வரப்போகிறார்கள்? அப்படி மதுவிலக்கை கொண்டு வரும் எண்ணம் இருந்தால் ஏன் “பூரண மதுவிலக்கு” பற்றி தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை?

தமிழகத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தவுடன் திமுக-வினரும், திமுக-வினரின் உறவினர்களும் நடத்தும் மது ஆலைகள் அனைத்தும் மூடப்படும் என திருமதி கனிமொழி கூறியுள்ளார்.  மதுவிலக்கு அமலுக்கு வந்தால் மது ஆலைகளை எப்படி நடத்த முடியும்? திமுக-வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதற்கும் மதுவிலக்கு கொண்டு வருவதற்கும் என்ன சம்பந்தம்?  தி.மு.க-வினர் நடத்தும் ஆலைகளை மூட எதற்காக நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும்?  உடனேயே மூடிவிடலாமே?

கடந்த 18.4.2016 அன்று நான் காஞ்சிபுரத்தில் பேசும் போது, “பூரண மதுவிலக்கு பூரண மதுவிலக்கு” என்றும் “முதல் கையெழுத்தே மதுவிலக்கை அமல்படுத்தும் கையெழுத்து தான்” என்றும் கூறி வந்த திமுக தலைவர் திரு. கருணாநிதி, தங்களது தேர்தல் அறிக்கையில் “பூரண” என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தவில்லை என்றும் முதல் கையெழுத்து  என்பது என்னவாயிற்று என்றும் கேட்டேன். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் இருந்த போது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 என்று ஒரு சட்டம் வந்தது என்றும், மதுவிலக்குக்கு தனி சட்டம் என்றாலே பூரண மதுவிலக்கு தான் என்று அர்த்தம் என்றும் விதண்டாவாதம் செய்துள்ளார் அவரது தனயன்.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 என்பது தான் தற்போதும் உள்ள சட்டம் என்பதை தி.மு.க-வினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த சட்டத்தில் உள்ள காப்புரைகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு விதிகளின் படி அதாவது, சுரடநள-படி தான் தற்போது பூரண மதுவிலக்கு இல்லாமல் இருக்கிறது.  எனவே, பூரண மதுவிலக்கு கொண்டு வர இந்த விதிகளை நீக்கறவு செய்து ஒரு அரசாணை வெளியிட்டாலே போதுமானது. இதற்கு எந்த புதிய சட்டமும் தேவையில்லை. ஒரே ஒரு கையெழுத்து மூலம் அரசாணை வெளியிடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியும்.  அவ்வாறு செய்வோம் என்று உறுதி அளிக்காமல், புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும், மது விற்பனையிலிருந்து அரசு விலகும் என்றும் குறிப்பிட்டிருப்பது, தனியார் கிளப்புகள் மூலம் மது விற்பனையைத் தொடர்வதற்குத் தான் என்ற குற்றச்சாட்டை நான் மீண்டும் சுமத்துகிறேன்.

கருணாநிதிக்கு மதுவிலக்கை கொண்டு வரும் எண்ணமே இல்லை. மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரிக்க முடியுமா என்பதற்காகவே, இது போன்ற ஒரு வாக்குறுதியை அவர் அளித்துள்ளார். 

கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பணிகளைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

திருச்சி மாவட்டத்திலுள்ள திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்; கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 19 தொகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளில்,

- 171 பள்ளிகள் அமைக்கப்பட்டு புதியதாக 913 ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

- பள்ளிகளுக்கு 324 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன.

- திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஒரு அரசு பொறியியல் கல்லூரியும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனமும், தேசிய சட்டப் பள்ளி ஒன்றும், ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், ஒரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன.

- புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், கந்தர்வக்கோட்டையில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன.

- 2,685 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 2,816 குடியிருப்புகளும், 1,797 தனி வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.

- நகர குடிசைப் பகுதிகளில் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.59 கோடி ரூபாய் செலவில் குடிசைப் பகுதியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

- திருச்சி, கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 101 கால்நடை மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

- கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

- மேலும், இம்மாவட்டங்களில் தற்போதுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

- திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம் 61 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 

- இந்த மாவட்டங்களில் மொத்தம் 22 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 6 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொடங்கப்பட்டுள்ளன. 13 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 

- அந்தநல்லூர், மணிகண்டம் மற்றும் மணப்பாறை ஒன்றியங்களைச் சார்ந்த

212 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் 48.67 கோடி ரூபாய் செலவிலும்; அறந்தாங்கி நகராட்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 42.49 கோடி ரூபாய் செலவிலும் நிறைவேற்றப்பட்டு உள்ளன.  மேலும், கரூர் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

- புதுக்கோட்டை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 48 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

- திருச்சிராப்பள்ளியில் மண்வள மகத்துவ மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

- திருச்சி மற்றும் புதுக்கோட்டை மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் மேன்மைமிகு மையங்கள் அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில்  78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

- கரூர் மாவட்டத்தில் பசுபதிபாளையம் அருகில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி முடிவுறும் நிலையில் உள்ளது.

- புதுக்கோட்டை மாவட்டம், பாம்பாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது.

- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குக் காகித அட்டை தயாரிக்கும் புதிய ஆலை துவங்கப்பட்டுள்ளது. 

- புதுக்கோட்டை மாவட்டத்தில் பொறியியல் உலோகம்  மற்றும் உலர் தோல் தொழிற்சாலை பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தால் சிமெண்ட் ஆலை நிறுவப்பட்டுள்ளது. 

- கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சியில் தொழிற்பேட்டை துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- கரூர் மாவட்டம், பெரியார் நகரில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

- ஸ்ரீரங்கம் கொத்தமங்கலம் அணைக்கட்டு முடிக்கப்பட்டுள்ளது.

- கொத்தமங்கலம் வாரி, நந்தியாறு மானோடை, பங்குனி வாய்க்கால், உப்பாறு, சண்முகா நதி ஓடை வெள்ளாறு, கண்ணூத்து ஓடை, மாமுண்டி ஆறு, கோரை ஆறு, உப்பாறு வாரி, பொன்னனி ஆறு ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

- ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் தங்குவதற்காக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது.

- ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத ஸ்வாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

- வண்ணத்துப் பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் மற்றும் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் தனியார் துறை மூலம் 150 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

- விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான நவீன தங்குமிடம் திருச்சிராப்பள்ளியில் கட்டப்பட்டுள்ளது. 

- புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் தனியார் துறை மூலம் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.

- திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 221 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

- கரூர் மாவட்டம் மாயனூர் அருகில் 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை நிறுவப்பட்டுள்ளது.

- ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 998 பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.

- பேரூராட்சிகளில் 170 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

- 254 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

- நெடுஞ்சாலைத் துறையின் வாயிலாக, 3,246 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 427 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 72 பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 29 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- 3,697 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. 22 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

- மேலும், பொதுப் பணித் துறையின் வாயிலாக 24 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.  21 இடங்களில் ஏரிகள் புனரமைக்கப்பட்டு உள்ளன. 6 இடங்களில் குளங்கள் மற்றும் கண்மாய்கள் புனரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

வாக்காளப் பெருமக்களே, “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்தே நான் பணியாற்றி வருகிறேன். “உங்களால் நான், உங்களுக்காகவே நான்”.  நான், சொன்னதைச் செய்தேன், சொல்லாத பலவற்றையும் உங்களுக்காக செய்திருக்கிறேன்.  ஏனென்றால், உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது தான் என்னுடைய தவ வாழ்வு.  அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள் போன்ற திட்டங்கள் எல்லாம் வரும் என்று நீங்கள் நினைத்தீர்களா? எதிர்பார்த்தீர்களா? எப்படி வந்தது? ஏனென்றால் ஒரு தாய்க்குத் தான் தன் பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது தெரியும்.  ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும் என் அன்பார்ந்த தமிழக மக்களுக்காக புதிதாக என்ன நன்மை செய்யலாம் என்று யோசித்து, யோசித்து ஒவ்வொரு புதிய புதிய திட்டமாகக் கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள்.  உங்கள் நல்லாதரவோடு மீண்டும் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையுமேயானால், நீங்கள் நினைத்துப் பார்க்காத, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத, இதைவிட சிறப்பான திட்டங்கள் பலவற்றை உங்களுக்காக கொண்டு வந்து நான் செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன். 

உண்மை எப்படி நம்பிக்கையை கொடுக்கிறதோ, உழைப்பு எப்படி வசதியைக் கொடுக்கிறதோ, திறமை எப்படி வெற்றியைக் கொடுக்கிறதோ, அது போல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்து இருக்கிறது. இந்த வசந்தம் தொடர்ந்திட, ஏழைகள் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, தமிழகம் அமைதிப் பூங்காவாய் தொடர்ந்திட, மின் வெட்டே இல்லை என்ற நிலை நிலைத்திட, பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திட, தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்திட, தொழிலாளர்கள் நலன் பெருகிட, விவசாயம் விருத்தி அடைந்திட, சேவைத் துறை மேலும் செழித்திட, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்றிட, தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நிலைநாட்டப்பட, தற்போதுள்ள நல்ல நலத் திட்டங்கள் நீடித்திட, அமைதி வளம் வளர்ச்சி என்ற பாதையில் தமிழகம்  தொடர்ந்து பீடு நடை போட, 

வருகின்ற 16.5.2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஆழுசு கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர்கள் அனைவரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறோன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com