* தொகுதி பெயர்
வில்லிவாக்கம்
* தொகுதி வரிசை எண்
14
* சிறப்புகள்
ஆசியாவிலேயே பெரிய சட்டப்பேரவைத் தொகுதி என்ற பெருமை வில்லிவாக்கம் தொகுதிக்கு இருந்தது.
ஆனால், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பின் கீழ் வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் தொகுதி உதயமானது.
அதுமட்டுமின்றி கொளத்தூர், ஆவடி, மாதவரம், விருகம்பாக்கம், மதுரவாயல், அண்ணாநகர் ஆகிய தொகுதிகளுக்கும் வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து சில பகுதிகள் சென்று விட்டன.
இதன் காரணமாக, இன்று சென்னையில் உள்ள தொகுதிகளிலேயே சிறிய தொகுதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வில்லிவாக்கம். நாயக்கர், நாயுடு சமுதாயத்தினரும், கிறிஸ்தவர்களும் இந்தத் தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் உள்ள சிட்கோ நகரில் தனியார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக தொழுநோயாளிகளுக்கு என தனியாக பலராமபுரத்தில் ரேஷன் கடை திறந்தது இந்தத் தொகுதியின் மற்றொரு சிறப்பாகும்.
* எல்லைகள்
பெரம்பூர், ஜிகேஎம் காலனி, பாடி, கொரட்டூர், கொளத்தூர்,
ஐசிஎஃப், அண்ணாநகர் ஆகிய பகுதிகள் வில்லிவாக்கம் தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 55 முதல் 58 வரையிலான வார்டுகள் மற்றும் 63, 64 என மொத்தம் 6 வார்டுகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.
* வார்டு விவரம்
விடுதலை குருசாமி நகர் - தெற்கு (55)
அயனாவரம் (56),
நாகம்மையார் நகர் - தெற்கு (57)
பன்னீர்செல்வம் நகர் (58)
வில்லிவாக்கம் - வடக்கு (63)
வில்லிவாக்கம் - தெற்கு (64)
* வாக்காளர்கள்
ஆண்கள் 1,24,897
பெண்கள் 1,27,337
திருநங்கைகள் 58
மொத்தம் 2,52,292
மொத்த வாக்குச் சாவடிகள் 212
* இதுவரை தேர்தலில் வென்றவர்கள்
1977 கே.சுப்பு (திமுக)
1980 ஜே.சி.டி பிரபாகர் (அதிமுக)
1984 வி.பி.சிந்தன் (சிபிஎம்)
1989 டபிள்யு.ஆர்.வரதராஜன் (சிபிஎம்)
1991 இ.காளன் (காங்கிரஸ்)
1996 ஜே.எம்.ஆரூண் ரஷீத் (தமாகா)
2001 டி.நெப்போலியன் (திமுக)
2006 ப.ரங்கநாதன் (திமுக)
2011 ஜே.சி.டி.பிரபாகர் (அதிமுக)
* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்
குமரவேல் பாண்டியன்,
பொது மேலாளர், மாநில தொழில் மேம்பாட்டுக்கழகம்
செல்லிடப்பேசி: 9443703430
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.