வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன்பாக, வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண்ணை அறிந்து கொள்வது அவசியம். வாக்காளரிடம் "பூத்-ஸ்லிப்' இல்லாவிட்டால், செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக இந்த வரிசை எண்ணை அறியலாம்.
வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுஞ்செய்தியாக "1950' என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வாக்காளரின் வரிசை எண், பாகம் எண், பெயர், வாக்குச் சாவடி முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி வழியாகவே பதிலாக அனுப்பி வைக்கப்படும். வாக்குச் சாவடியில் வரிசை எவ்வளவு இருக்கிறது; கூட்டமாக இருக்கிறதா, எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் குறுஞ்செய்தி அனுப்பலாம்.
அதன்படி, ண உடஐஇ சஞ. என்ற முறைப்படி "1950' என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால், வாக்குச் சாவடியில் வரிசை விவரம், வாக்காளரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின் மூலம் வாக்காளர்கள் கூட்டநெரிசலை தவிர்த்து எளிதாக வாக்களிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.