
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேரவை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
இந்நிலையில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுகவின் சட்டப் பேரவைக் குழு உறுப்பினராக, அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.