
சென்னை: நடைபெற்ற தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தாலும் ஐந்து தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், அவர்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 134 இடங்களை கைப்பற்றிய அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
அதிமுக தோல்வியடைந்த பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் ஐந்து தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி போட்டியிட்ட பென்னாகரம் மற்றும் தளி (இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன் இரண்டாமிடம்), நாகர்கோவில் (பாஜக- காந்தி), குளச்சல் (பாஜக-பி.ரமேஷ்), கிள்ளியூர் (பாஜக-விஜயராகவன்) ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
ஒரே ஒரு தொகுதியில் நான்காம் இடம்
இதுதவிர அதிமுக ஒரே ஒரு தொகுதியில் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் அதிமுக நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜயதாரணி மீண்டும் வெற்றி பெற்றார். பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடம்பிடித்தனர். அதிமுக வேட்பாளர் நாஞ்சில் டொமினிக் சேவியோ ஜார்ஜ் 24801 வாக்குகள் பெற்று நான்காம் இடமே பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.