இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம்தான்: விஜயகாந்த்
By DN | Published On : 22nd April 2016 08:20 AM | Last Updated : 22nd April 2016 08:20 AM | அ+அ அ- |

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசினார்.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தத் தேர்தலில் நல்ல ஆட்சி வேண்டுமா அல்லது கெட்ட ஆட்சி வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன.
நாங்கள் ஆறு கட்சிகள் சேர்ந்து ஆறுமுகமாக இருக்கிறோம். எங்களுக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான். இனிமேல் இறங்குமுகம் இருக்காது.
ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் இறந்து போகிறவர்களுக்கு ரூ. 2 அல்லது ரூ. 3 லட்சம் கொடுப்பார்கள். உயிரின் விலை அவ்வளவுதானா? இதைத் தடுக்கும் வகையில் மனித உரிமைக் கழகம் மூலம் வழக்குத் தொடுக்க எனது கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.