தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுகவுக்கு தகுதியில்லை: ஜி.கே.வாசன்
By DN | Published On : 27th April 2016 08:30 AM | Last Updated : 27th April 2016 08:30 AM | அ+அ அ- |

தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தகுதி கிடையாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை, கம்பம் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ஓ.ஆர்.ராமச்சந்திரனுக்கு வாக்கு சேகரித்து, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி, மாறி ஆட்சி செய்யும் அதிமுக, திமுக கட்சிகள் கிராமங்களில் சாலை, தெரு விளக்கு, மின்சாரம், கழிப்பறை என எவ்வித அடிப்படை வசதியும் செய்யவில்லை. இதனால், இந்த இரு கட்சிகளும் தேர்தல்களில் போட்டியிட எவ்வித தகுதியும் இல்லை. எனவே, ஆட்சி மாற்றம் வேண்டும். அது மக்கள் விரும்பும் விஜயகாந்த் தலைமையில் உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சியாகும். இந்தக் கூட்டணி முலமாக அதிமுக, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்றால், இனிமேல் தமிழகத்தின் தலை எழுத்தை ஆண்டவன் வந்தாலும் மாற்ற முடியாது என்றார்.