திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என்பது வெறும் பசப்புரை: கருணாநிதி நகைச்சுவை
By dn | Published On : 30th April 2016 12:34 PM | Last Updated : 30th April 2016 12:34 PM | அ+அ அ- |

சென்னை : திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வது பரப்புரையே அல்ல.. வெறும் பசப்புரை என்று கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக தலைவர் கருணாநிதி பேட்டியளித்திருந்தார்.
அப்போது, செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு கருணாநிதி நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.
அதாவது, திமுகவில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்வதுபற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, திமுகவில் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களே இல்லை என்று கூறுவது பரப்புரையே அல்ல.. அது வெறும் பசப்புரை.
திமுகவில் தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இளைஞர்களின் அணியால் உருவானதுதான் திமுகவே என்று கருணாநிதி கூறினார்.