பல்லில்லாத பாம்பு தேர்தல் ஆணையம்: முத்தரசன்
By DN | Published On : 01st May 2016 08:29 PM | Last Updated : 01st May 2016 08:29 PM | அ+அ அ- |

தேர்தல் ஆணையம் பல்லில்லாத பாம்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடையே பேசுகையில், தேர்தல் ஆணையம் பல்லில்லாத பாம்பு. மத்திய அரசுக்கும், தமிழக ஆளுங்கட்சிக்கும் உறவு உள்ளது.
மத்திய அரசுதான் தேர்தல் ஆணையம் செயல்படுவதைத் தடுக்கிறது. கரூரில் பல கோடி பணம், பணம் எண்ணும் இயந்திரங்கள் உள்ளிட்டவை பிடிப்பட்டதாகவும், ஆனால் பணத்தைக் கையாண்ட அன்புநாதன் தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அன்புநாதன் இருக்கும் இடம் உளவுத்துறைக்கு தெரியாதா? அவரை ஏன் இன்னும் பிடிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார் முத்தரசன்.