தமிழகத்தில் "கலெக்ஷன்' - "கரப்ஷன்' - "கமிஷன்' மூன்றும் இல்லாத ஒரு ஆட்சியை தருவோம் என்றார் அவர். என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கேள்வி: தேர்தல் நிலவரம் எவ்வாறு உள்ளது?
பதில்: 234 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால்தான் பணம் கொடுத்து வாக்கை வாங்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டுள்ளது.
கே: திடீரென ஜெயலலிதா சென்னையில் பிரசாரம் செய்தது குறித்து..?
ப: தோல்வி பயம் தான் காரணம்.
கே: தமிழகத்தில் நரேந்திர மோடியின் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ப: எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இரண்டு திராவிடக் கட்சிகளையும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளார்களே?
திராவிடக் கட்சிகளை விமர்சனம் செய்து தான் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளது.
பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தகவல்கள் வருகிறதே?
மின்வெட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் செய்யக் கூடிய மூன்று விஷயங்கள் என்னவாக இருக்கும்?
"கலெக்ஷன்' - "கரப்ஷன்' - "கமிஷன்' மூன்றும் இல்லாத ஒரு ஆட்சியை தருவோம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.