

தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்ற மதுவிலக்கு மற்றும் சுங்கவரித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நிறுவனத்தில் (டாஸ்மாக்) நிரப்பப்பட உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Junior Assistant
காலியிடங்கள்: 500
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tasmac.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.354; எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.177 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை “Managing Director, TASMAC” என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்த வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ உறுதி சான்றிதழ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tasmac.co.in/JA_Instructions.pdf என்ற வலைத்தள லிங்கிள் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.