மேஷ லக்னத்தில் புதன் இருந்தால் ஏற்படும் விளைவுகள்? 

ராசிகளில் முதல் ராசியான ஆட்டை அதுவும் கொம்பு முளைத்த முரட்டு செம்மறி ஆட்டைச்
மேஷ லக்னத்தில் புதன் இருந்தால் ஏற்படும் விளைவுகள்? 
Updated on
1 min read

ராசிகளில் முதல் ராசியான ஆட்டை அதுவும் கொம்பு முளைத்த முரட்டு செம்மறி ஆட்டைச் சின்னமாகக் கொண்ட மேஷ லக்னத்துக்கு ஆட்சியானர் செவ்வாய் என்பதும், செவ்வாய்க்கு மூலத்திரிகோண வீடும் இதுவே என்பது நீங்கள் அறிந்ததே. செவ்வாய் புதனை தன் பகைவராக எண்ணுகின்றார். ஆனால் புதன் செவ்வாயை தனக்கு சமமான கிரகமாக எண்ணுகின்றார். 

3-ம், 6-ம் ராசிகள் பகையானவை என்பதால் அந்த இரு ராசிகளும், அவைகளின் அதிபதியான புதனும் செவ்வாய்க்கு மட்டுமல்லாமல் செவ்வாயின் வீடான மேஷத்துக்கும் பகை கிரமாகிவிடுகின்றார். எனவே மேஷத்துக்கு புதனின் செயல்பாடுகள் லக்கின பாபர் என்ற அடிப்படையில் திருப்தியான நிலையை அளிக்காது. 

புதன் என்றால் சாதுர்யத்துக்கும் சாமர்த்தியம் மற்றும் திறமைக்கும் பெயர் பெற்றவர் அல்லவா! ஆனால் மேஷத்தில் உள்ள புதன் சாதுர்யம், சாமர்த்தியம், திறமையை இவர்களுக்கு அளிப்பதில்லை. மாறாக குறுக்கு புத்தியையும், ஏமாற்று வித்தைகளையும் தான் அளிப்பார். கல்வித்கதிபதியானவர் புதன் என்றாலும் கல்வி பலத்தைக் கொடுப்பார் என்று கூற முடியாது. கல்வி ஸ்தானமான 2-ம் இடத்து அதிபதியான சுக்கிரன் பலமாக இருந்தால் தான் ஓரளவு கல்வி வரும். 

எனினும் 3,6 எனும் அசுபஸ்தானங்களுக்கு ஆதிபத்தியம் பெறும் புதன் மேஷ லக்னத்தில் திக்பலம் பெறும் நிலையில் இந்த அசுப ஆதிபத்யத்தின் பலன்களையே செய்வார் என்பதால் ஞானத்தைக் கொடுத்தாலும் அந்த விஷய ஞானமானது குறுக்கு வழிகளில் செல்லக்கூடியதாகவே இருக்கும். உலகத்தில் உள்ள தில்லுமுல்லுகளில் பாதியையாவது மேஷ லக்னதாரர்களுக்கு புதன் லக்னத்தில் உள்ளபோது கற்றுக் கொடுப்பார். 

எந்த வகையில் அதிகமாக சம்பாதிக்கலாம். எப்படி நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற எண்ணமே அதிகமாக இருக்கும். 3-ம் இடம் மனோஸ்தானம் என்பதால் இவர்கள் மனோநிலை உறுதியாக இல்லாமல் அடிக்கடி மாறும் சலனசித்தம் உள்ளவராகவே வைத்திருக்கும். அடிக்கடி எண்ணங்களையும், பேச்சுக்களையும் மாற்றிக் கொள்ளுவார்கள். 

மகாதைரியசாலி போல நடிப்பார்கள். வீர தீர சாகஸம் எல்லலம் செய்வேன் என்று பீற்றிக் கொள்வார்கள். 3-ம் இடமான போகஸ்தானத்து அதிபதி புதன் என்பதால் பெண்கள் விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். 6-ம் இடம் ரோகஸ்தானம் என்பதால் உடலில் சிற்சில வியாதிகள் தவறாமல் அளித்துவிடுவார். 

குணாதிசயங்களைக் கெடுத்தாலும், இவர்களுக்கு சற்றே சங்கீத ஞானத்தை புதன் அளிக்கின்றார். இவர்கள் சங்கீத வித்வான்களாக இல்லாவிட்டாலும், சங்கீதத்தை ரசிக்கும் மனப்பாங்கு உடையவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் மேடை பேச்சில் வல்லவர்களாவும் இருப்பர். இவர்கள் அறுசுவைப் பிரியர்களாக இருப்பார்கள். பலருக்கு விளையாட்டுக்களில் ஈடுபாடோ, ஆர்வமோ இருப்பதுண்டு. சிலர் நன்றாக விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்களாக ஆவதும் உண்டு. பெரும்பாலும் புதன் இவர்களுக்கு குறுக்கு புத்தியை அதிகம் கொடுக்கிறார். 

அடிக்கடி விபத்துக்கள், வெட்டுக்காயம், நெருப்புக் காயங்கள் போன்றவை ஏற்படக்கூடும். கடுமையான அஜீரண வாயுக்கோளாறு, அல்சர் ஏற்படும். தோல் சம்பந்தமான வியாதிகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com