சூலம் ஏன்? எதற்கு பார்க்கிறோம் தெரியுமா? 

நாம் காலண்டரில் சூலம் என்று ஒன்றைப் பார்த்திருப்போம். அது எதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியுமா..
சூலம் ஏன்? எதற்கு பார்க்கிறோம் தெரியுமா? 
Updated on
1 min read

நாம் காலண்டரில் சூலம் என்று ஒன்றைப் பார்த்திருப்போம். அது ஏன்? எதற்காக பார்கிறோம்? சூலம் என்றால் என்ன? தெரிந்துகொள்வோம் வாங்க.

பொதுவாக சூலம் என்றால் பிரயாணத்திற்குப் பார்க்கப்படுவது என்று பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பிரயாணம் என்றால் தினசரி பிரயாணம் அல்ல. அந்தகாலத்தில் வாகனங்கள் இல்லாத சமயத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த யாத்திரை. அதாவது நீண்ட தூரம் பயணம்  மேற்கொள்ளும் காலகட்டத்தில் இது பார்க்கப்படும் வழக்கத்தை நம் முன்னோர்கள் வகுத்து நமக்கு வழங்கியுள்ளனர். 

சூலம் எப்படி பார்க்க வேண்டும்?

ஞாயிறன்று மேற்கு, வடமேற்கு யாத்திரை மேற்கொள்ளும் போது நாழிகை 12 என்றால் நேரகணக்கு பார்க்கும்போது சரியாக 5 மணி நேரம் வரும். அந்த ஐந்து மணி  நேரத்திற்குள் யாத்திரை செல்வதைத் தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லை அவசரமாக சென்றேயாகவேண்டும் என்றால் பரிகாரமாக வெல்லம் சாப்பிட்டு பின்பு வெளியே  செல்வது நல்லது.

அதேபோன்று, வியாழனன்று தெற்கு, தென்கிழக்கு திசையில் யாத்திரை மேற்கொள்வதாக இருந்தால் 20 நாழிகை, அதாவது சூரிய உதயமாகி சரியாக 8 மணி நேரத்திற்கு  யாத்திரை புறப்படக்கூடாது. 20 நாழிகை முடிந்தபின்பு செல்லலாம். அப்படிப் போகவேண்டிய அவசரம் இருப்பின் ஏதாவது ஒரு தைலம் சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நம்  முன்னோர்கள் வகுத்துள்ளனர். 

திருமணம், சுவாமி புறப்பாடு, கும்பாபிஷேகத்திற்கு சூலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பிரயாணத்திற்குப் பார்த்தால்போதும். குறிப்பாக யாத்திரைக்குச்  செல்பவர்களுக்கு சொல்லப்பட்ட விஷயமாகும். மக்கள் இதைக் குழப்பிக்கொள்ள வேண்டாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com