திருவீதி உலாவரும் இறைவன்! 

திருவிழா காலங்களில் இறைவன் திருவீதி உலாவரும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்
திருவீதி உலாவரும் இறைவன்! 
Updated on
1 min read

திருவிழா காலங்களில் இறைவன் திருவீதி உலாவரும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். அப்போது, அவர் எழுந்தருளியிருக்கும் வாகனத்திற்கு ஏற்ப பலன்கள் உண்டு' என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
சப்ரமஞ்சத்தில் எழுந்தருளி வரும் இறைவனையும் இறைவியையும் தரிசித்தால் லட்சுமி தேவியின் கடாட்சம் கிட்டும். பூதவாகனத்தில் அமர்ந்து பவனிவரும் ஈசனையும் அம்பாளையும் தரிசித்தால் தீயசக்திகளின் பாதிப்பு இருந்தால் நீங்கும். வெள்ளி ரதம், மயில் இவற்றில் இறைவனும் இறைவியும் எழுந்தருளி உலாவரும்போது தரிசிப்பவர்களுக்கு செல்வ வளம் பெருகும்.
யானை வாகனத்தில் இறைவன் உலா வரும் போது தரிசித்தால் எதிரிகள் அழிவர். மேலும் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி உலா வரும்போது தரிசித்தால் துன்பங்கள் நீங்கும். நந்தி வாகனத்தில் சிவபெருமானுடன் அம்பாளும் இணைந்து உலாவரும் போது தரிசித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், ஆரோக்கியமாகவும் வாழலாம். காமதேனு வாகனத்தில் எழுந்தருளி ஈசனும் அம்பாளும் வீதிஉலா வரும்போது அர்ச்சித்து வழிபட்டால் நினைத்த சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
குதிரை வாகனத்தில் அமர்ந்து இறைவன் உலாவரும் வைபவத்தினைத் தரிசித்தால் வீரமும் வெற்றியும் கிட்டும். புருஷாமிருக வாகனத்தில் வரும் இறைவனை வழிபட்டால் நடைபெறாது என்று நினைத்த காரியங்களும் விரைவில் நடைபெறும். பொதுவாக, விழாகாலங்களில் உலாவரும் இறைவனையும் இறைவியையும் தரிசிப்பதால் சகல நன்மைகளுடன் மங்களமும் கிட்டும் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
விசேஷ நாள்களில் ஈசனையும் அம்பாளையும் ஆலயங்களில் அலங்கரிப்பது வழக்கம். அப்போது, இறைவனையும் இறைவியையும் அர்ச்சித்து வழிபட்டால் சகல பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று வேத நூல்கள் கூறுகின்றன.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com