சட்டப்பேரவை விதிகள் அறிமுகம்

சட்டப்பேரவை விதிகள் அறிமுகம்

முன்னுரை

சட்டப்பேரவை விதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாறு, சட்டம் இயற்றும் வளர்ச்சி ஆகியவற்றை பற்றி விரிவாக காணலாம். சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் இயங்கி வரும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பற்றியும், சட்டப்பேரவைத் தொகுதிகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளப் போகிறோம். பத்திரிகைகளில் ‘110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் தமிழக முதல்வர்’ என்று படித்திருக்கிறோம். ஆனால் அவ்விதி என்ன சொல்கிறதென்பது தெரியாது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி பொது மக்களும் இவற்றை தெரிந்து கொள்வதால் நாடு சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

வரலாறு

தற்போதைய தமிழ்நாடு சட்டப்பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919-இன் படி, சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 9, 1921-ல் கூடியது. இதன் துவக்க விழா  கனாட் அவர்களால், அப்போதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் துவக்கி வைக்கப்பட்டது.

இந்திய அரசாணை 1935-ன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, இரண்டு அவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டப்பேரவை முறையே ஜூலைத் திங்கள், 1957-ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் ஒய்வு பெறுமாறு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஒய்வு பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்குமாறு முறைபடுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவை இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் சட்டமியற்றும் அவையாகும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து பேரவைத் தலைவராக பி. தனபால் தேர்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகிறார். இது 15-ஆவது சட்டப்பேரவையாகும்.

சட்டப்பேரவை அல்லது கீழவை

இந்திய அரசாணை 1935-ன்படி இம்மன்றம் இரு அவைகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டு மன்றமாக அழைக்கப்பட்டது. கூட்டுப் பேரவையில் 375 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்திருந்தது. அதில் 125 உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளர்களால் (மறைமுகத் தேர்வு) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். இம்மன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை மேலவை அல்லது சட்ட மேலவை

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களாக 260 பேரும் அதில் 104 பேர் நேரடியாக இந்திய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர், 6 பேரை கவர்னர் ஜெனரல் தேர்ந்தெடுப்பார். 128 பேர் பிரதேச சமுதாயத் தொகுதிகளில் இருந்தும் 22 பேர் சிறுபான்மை, பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதிகாரங்கள்

இரு அவைகளும் சம அதிகாரம், சம ஆற்றல் கொண்டவை. ஆனால் நிதி, வழங்கல் போன்ற மசோதாக்கள் கீழ் அவையிலேயே நடைபெறும். இரு அவைகளுள் ஒன்று கீழவை என்றும் மற்றொன்று மேலவை என்றும் அழைக்கப்பட்டன.

அவைத் தலைவர்கள்

1861-1937 காலகட்டத்தில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கௌன்சிலின் அவைத்தலைவர் பிரசிடன்ட் (President of the Council) என்றழைக்கப்பட்டார். 1861-ல் உருவாக்கப்பட்ட நாள் முதல் 1920-ல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சிமுறை உருவாகும் வரை சென்னை மாகாண ஆளுநரே கௌன்சிலின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். இரட்டை ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்தியர்கள் அவைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். முதலிரண்டு இந்திய அவைத்தலைவர்களான பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரியும், எல்.டி. சாமிக்கண்ணு பிள்ளையும் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பின் வந்த அவைத்தலைவர்களை அவையின் உறுப்பினர்களே தேர்ந்தெடுத்தனர். 1937-86 காலகட்டத்தில் கௌன்சிலின் அவைத்தலைவர் சேர்மன் (Chairman of the Council) என்றழைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com