மத அரசியல்-20: ரஸ்டாஃபாரி

மத அரசியல்-20: ரஸ்டாஃபாரி
Published on
Updated on
2 min read

ரஸ்டாஃபாரி (Rastafari)

ரஸ் (Ras) என்பதற்கு இளவரசன் எனப் பொருள். ஹைலி செலாஸ்ஸியின் (Haile Selassie) செல்லப் பெயர் “டஃபாரி மெகோனென்”( Tafari Makonen). அதை வைத்து ரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ரஸ்டஸ்ஃபாரியனிசம் எனப் பெயரிட்டனர். ஹைலி செலாஸ்ஸி 1930 முதக் 1974 வரை எத்தியோப்பியாவை ஆண்டவர் ஆவார். ரஸ்டர்கள் ஹைலி செலாஸ்ஸியை ஒரு தூதுவர் என நம்புகின்றனர்.

ஹைலி செலாஸ்ஸி

பைபிளில் கூறப்பட்டிருக்கும் ”ராஸ்டவியல்” (Rastology) என்பதை குறிப்பாக கொண்டு ஏற்பட்ட மதமாகும். எத்தியோப்பியாவின் முன்னாள் அதிபர் ஹைலி செலஸ்ஸி இம்மத வளர்ச்சியில் அதிகம் ஈடுபாடு கொண்டார். இயேசுவின் இரண்டாம் வரவை எதிர்பார்த்து  1930-களில் இம்மதம் தோற்றுவிக்கப்பட்டது.

மத தத்துவ அறிஞர்கள்

லியோனர்ட் பாரட் (Leonard E. Barrett) இம்மதத்தை தனிப்பிரிவு என்கிறார். சமூகவியலாளர் எர்னஸ்ட் கேஸ்ட்மோர் (Ernest Cashmore) இதை கலாசாரம் என்கிறார். ஆனால் என்னிஸ் எட்மாண்ட்ஸ் (Ennis B. Edmonds) இம்மதத்தை ஒரு புதுப்பிக்கும் இயக்கம் என்கிறார். எட்மாண்ஸ் இதை உலக மதங்களில் ஒன்று என்கிறார்.

பெரும்பாலான ரஸ்டர்கள் இதை மதம் என்று கருதுவதில்லை, இதை வாழ்க்கைமுறை என்கின்றனர். பிரிட்டீஷ் அரசு இன உறவுகள் சட்டம், 1976 (Race Relations Act 1976) இன் படி ராஸ்டஸ்ஃபாரி ஒரு இனக்குழு என அறிவித்துள்ளது. 

மார்கஸ் கார்வே 

மார்கஸ் கார்வே (Marcus Garvey) என்ற ஆப்ரிக்கர் ரஸ்டஃபரியால் கவரப்பட்டு மதத்தைத் தழுவினார். இவர் இம்மதத்தை பெரும் அளவில் பரப்பியதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

நம்பிக்கைகள்

ரஸ்டர்கள் தங்கள் மதத்திற்கு ”ரஸ்டவியல்’ கொள்கைகளை முன்வைத்தே செல்கின்றனர். சமூகவியலாளர் பீட்டர் க்ளார்க் (Peter B. Clarke) ரஸ்டர்களின் நம்பிக்கைகளை பொதுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்கிறார். ரஸ்டர்களின் நம்பிக்கை ஜூடோ-கிறிஸ்துவ (Judeo-Christian) தாக்கம் அதிகம் என்கிறார்.

ரஸ்டர்களின் கொள்கைகள்

ரஸ்டர்கள் இரு அடிப்படைக் கொள்கைகளை கடைபிடித்தனர். ஒன்று கடவுளை நேசித்தல், மற்றொன்று அருகில் இருப்பவர்களை நேசித்தல் ஆகும். கஞ்சா பயன்படுத்துவது அவர்களின் முக்கிய மதச் சடங்காகும். ரஸ்டாஃபரி இசை, டிரம்ஸ், மந்திர உச்சாடனம், ஆடல் போன்றவற்றுடன் சம்மந்தப்பட்டது. இன்று 7 லட்சம் பேருக்கு மேலாக ரஸ்டஸ்ஃபாரி மதத்தைத் தழுவுகிறார்கள்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com