ஜூன் மாதப் பலன்கள் - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்...
ஜூன் மாதப் பலன்கள் - தனுசு
Published on
Updated on
2 min read

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் தனுசு ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் குரு சப்தம ஸ்தான சஞ்சாரத்தின் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் ஸ்தானாதிபதி புதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.

கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அரசியல்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்கு பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.

மூலம்

இந்த மாதம் மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. மனக்கவலை நீங்கும். பணவரத்து குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும்.

பூராடம்

இந்த மாதம் கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

உத்திராடம் 1ம் பாதம்

இந்த மாதம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்னைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள் : 1, 27, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com