ஜூன் மாதப் பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்...
ஜூன் மாதப் பலன்கள் - மீனம்
Published on
Updated on
2 min read

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் மீன ராசியினரே, நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.

குடும்பாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுக வாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.

பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

கலைத்துறையினர் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

அரசியல்துறையினருக்கு இருந்த குழப்பம் நீங்கும். மனவருத்தம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த மாதம் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.

உத்திரட்டாதி:

இந்த மாதம் வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.

ரேவதி:

இந்த மாதம் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 7, 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com