

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கிரகநிலை:
ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - விரைய ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
03.11.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.11.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.11.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
17.11.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
27.11.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் எந்த காரியத்திலும் வேகம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.
மகம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும்.
பூரம்:
இந்த மாதம் ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம். வீண் அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.
உத்திரம் 1ம் பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும். எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்குவது.
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 03, 04, 30
அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 11, 12
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.