நவம்பர் மாதப் பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
monthly predictions
Published on
Updated on
2 min read

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ)  - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

03.11.2025  அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

16.11.2025 அன்று தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.11.2025 அன்று தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

17.11.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில்  சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

27.11.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  பகவான்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

 உத்திரம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம்  விரும்பி பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

அஸ்தம்:

இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.

சித்திரை 1, 2, பாதம்:

இந்த மாதம்  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பை ஏற்படுத்தும்.

பரிகாரம்: நவகிரகத்தை வணங்கி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: நவம் 05, 06

அதிர்ஷ்ட தினங்கள்: நவம் 13, 14, 15

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com