மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.
கிரகமாற்றம்:
08.10.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10.10.2025 அன்று பஞசம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17.10.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சூரியன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27.10.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து செவ்வாய், புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
இந்த மாதம் நினைத்த காரியங்களை செவ்வனே செய்து முடிக்கும் திறன் அதிகரிக்கும். எண்ணிய காரியங்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் உங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். சிற்றின்ப செலவுகள் கூடும். பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களில் முடிவெடுப்பதில் கூடுதலாக கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் தைரியம் குறையும். அரசியல்வாதிகளுக்கு மனகவலை குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
அஸ்வினி:
இந்த மாதம் வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.
பரணி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தூர தேச பயணங்களை சற்று ஒத்திப் போடுவது நல்லது.
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை கந்தசஷ்டி படித்து வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலை தவிர்க்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: அக் 24, 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 06, 07
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.