ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அக்டோபர் மாதப் பலன்கள் - சிம்மம்

சிம்ம ராசிக்கு அக்டோபர் மாதம் எப்படி இருக்கும்..

News image
Updated On :3 அக்டோபர் 2025, 8:03 am

கிரகநிலை:

ராசியில் சுக்கிரன், கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

08.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன்   தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

17.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

27.10.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் வீண் அலைச்சல் காரிய தடை ஆகியவை அகலும். தடை நீங்கி காரியங்கள்  நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள்  உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும்.  சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் சோர்வும், மன குழப்பமும் நீங்கும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டு தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். சக ஊழியர்கள் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப விஷயங்களை  அடுத்தவரிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர், நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு உடல் சோர்வும் திடீர் கவலைகளும் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு காரிய அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். சக மாணவர்கள் ஆதரவும் இருக்கும்.

மகம்:

இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

பூரம்:

இந்த மாதம்  எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.  எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:

இந்த மாதம்  புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மனக்கவலை உண்டாகும்.

பரிகாரம்: தினமும் பிரதோஷ நேரத்தில் சிவனை வணங்குவதன் மூலம் எல்லா நன்மைகளும் உண்டாகும். தடைகள் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்:     அக் 06, 07

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 15, 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.