புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
purattasi month predictions
மாதப் பலன்கள்
Published on
Updated on
1 min read

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்:

29.09.2025 அன்று  பஞசம  ஸ்தானத்தில்  இருந்து  புதன்   ரண ருண ரோக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

08.10.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

10.10.2025 அன்று  சுக ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   பஞசம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனாலும் எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பெண்களுக்கு எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு  தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். உங்கள் மன உறுதி உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும். மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.

கார்த்திகை:

இந்த மாதம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சனைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

ரோகினி:

இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை  சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி  வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி  கிடைக்கலாம்.  சிலருக்கு கூடுதல் பொறுப்புகள்  வந்த சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் வாராகி தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சந்திராஷ்டம தினங்கள்:     செப் 29, 30, அக்டோ 01

அதிர்ஷ்ட தினங்கள்: அக் 08, 09

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com