ஜனவரி மாதப் பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
monthly predictions
மாதப் பலன்கள்
Updated on
2 min read

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில்  சந்திரன் -  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  குரு (வ)  -  சுக  ஸ்தானத்தில் கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் சனி, ராஹூ -  என கிரக நிலைகள் உள்ளன.

கிரக மாற்றங்கள்:

11-01-2026 அன்று புதன்  பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-01-2026  அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-01-2026  அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காத வராக இருப்பீர்கள். இந்த மாதம் எதிர் பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான  பலன் கிடைக்கும்.  திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும்.  செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார் கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.

கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகர மாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளை களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங் களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப் படும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். மேற்படிப்பிற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிலும் பொறுமை நிதானம் அவசியம். தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

ரோகிணி:

இந்த மாதம் உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும். ஆசிரியர் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;

சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com