ஜனவரி மாதப் பலன்கள் - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..
monthly predictions
Updated on
2 min read

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், செவ்வாய் -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சனி, ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  தொழில்  ஸ்தானத்தில்  குரு (வ)  -  அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

கிரக மாற்றங்கள்:

11-01-2026 அன்று புதன்  பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026  அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

14-01-2026 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-01-2026  அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

29-01-2026  அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங் களை  செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த மாதம் விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடை வீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்த யங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர் களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கவனமாக பாடங் களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர் களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:

இந்த மாதம் வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.

அஸ்தம்:

இந்த மாதம் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த  தடை தாமதம் நீங்கும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப நிம்மதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனம் வருந்தும்படியான நிலை மாறும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

சித்திரை 1, 2, பாதங்கள்:

இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com