
தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
கிரகநிலை
ராசியில் ராகு, சுக்ரன்(வ), புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என வலம் வருகிறார்கள்.
கிரகமாற்றங்கள்
26-04-2025 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்
எவரிடமும் முடிந்தவரை சிக்கிக் கொள்ளாமல் விலகிக்கொள்ளும் மீன ராசி அன்பர்களே எந்த பிரச்னைகளையும் சந்திப்பதற்கு முன் மிகுந்த யோசனைகளை செய்து முடிவெடுத்துக் கொள்வீர்கள்.
இந்த வருடம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும். சிரமம் ஏற்படுகிற நேரங்களில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதாலும் மந்திர ஸ்லேகங்களை உச்சரிப்பதாலும் தகுந்த பலன் பெறலாம். தந்தை வழி சார்ந்த பங்காளி உறவு என்ற அமைப்பில் வருபவர்கள் உங்களுக்கு சில நிர்ப்பந்தங்கள் தருவார்கள் கவனமுடன் செயல்படுவதால் சிரமங்களைத் தவிர்க்கலாம். கணவன் மனைவி ஒற்றுமை குரு பகவானின் நல்லருளால் சிறப்புடன் திகழும்.
திருமண வயதினருக்கு முயற்சிகள் நல்ல பலனைத்தரும் விஷப்பிராணிகளிடத்திலும் விஷ பொருள்களிலும் தகுந்த கவனமுடன் விலகி செயல்படுதல் நலம் தரும்.
வாழ்வில் அனுபவிக்க வேண்டிய சொகுசான பலன்கள் இக்காலத்தில் கைகூடும். தொழிலிலும் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சேமித்து வைக்க நல்வழிகள் உண்டாகும்.
வெளியூர் பிரயாணங்கள் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் சென்று வரும் வகையினர் தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் சில பிரச்னைகள் வரலாம். சகஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம்.
விவசாயிகள் புதிய சொத்து வாங்கி அதனை திருத்தம் செய்வார்கள். பயறு வகைகளில், பனை பொருள்களில் நல்ல வருவாய் கிடைக்கும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் சிறந்த பலனைக் காணலாம். கால்நடைச் செல்வங்கள் பெருகும். பூர்வீகச் சொத்தின் பேரில் இருக்கும் கடன் தீரும். அதில் இருக்கும் வில்லங்கமும் விலகும். விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும். பயிர்கள் சேதம் அடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். பெண்களுக்கு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கர்ப்பிணிப் பெண்கள் கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம்.
உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தைப் பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உங்களிடம் இருந்து பிரிந்த சொந்தங்கள் திரும்பி சேர்வார்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எபோதுமே இழக்கக் கூடாது. சகோதரர்கள் வகையில் பகை வரலாம். ஆகவே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம்.
கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத் திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும்.
கணிணி, சட்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் சமையற்கலை சம்பந்தப்பட்ட படிப்பினில் உள்ள மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அடுத்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம். கெட்டவர்களின் சகவாசத்தை முற்றிலுமாக விட்டொழிக்கவும்.
பூரட்டாதி
இந்த ஆண்டு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
உத்திரட்டாதி
இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். மன நிம்மதி கிடைக்கும். காரிய வெற்றி உண்டாகும். நீண்ட நாள்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டு. ஆனால் தாமதப்படும். கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். வெளியூர் சென்று வர நேரிடலாம்.
ரேவதி
இந்த ஆண்டு மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும். உறவினர் மற்றூம் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.
மலர் பரிகாரம்: தினமும் முல்லை மலரை நவக்கிரக குருவிற்கு சாற்றி வழிபடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.