தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கன்னி)

கன்னி ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு எப்படி இருக்கும்?
கன்னி ராசி
கன்னி ராசி
Published on
Updated on
3 min read

தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கிரகநிலை:

ராசியில் கேது - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப  ஸ்தானத்தில் செவ்வாய்  என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

26-04-2025 அன்று ராகு பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று  கேது பகவான் ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.

17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

06-03-2026  அன்று சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

08-10-2025 அன்று குரு பகவான்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்

21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்

கடந்த காலங்களில் இருந்த வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். இருப்பினும் குரு கொஞ்சம் அலைச்சலான சூழ்நிலைகளை உருவாக்குவார்.

உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளை மனமுவந்து செய்வீர்கள்.

அருளும் பொருளும் நிரம்பப் பெறுவீர்கள். புத்திர வகை அனுகூலம் உண்டு. அரசுத்துறை சார்ந்த வகையில் கடன், வழக்கு, பகை உருவாகும். வாழ்க்கைத்துணையின்  அனுகூல செயல்பாட்டால் வாழ்வில் நினைத்த லட்சியங்களை நினைத்தபடி செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

உடல் நலத்தில் நன்கு கவனம் செலுத்தி வைத்திய முறைகளை தகுந்தவாறு மேற்கொள்வதால் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும்.

தந்தை வழி சார்ந்த உறவினர்களால் உதவியோ துன்பமோ எதுவும் இலலை. புதிய முயற்சிகள் மனம் நிறைந்த வெற்றியைத் தரும். தாய் செய்த புண்ணிய பலன்கள் தகுந்த நேரத்தில் உங்களைக் காத்துநிற்கும். விரயமான செலவுகள் அச்சத்தை ஏற்படுத்தினாலும் புதிய தொழில் வருமானங்கள் அதனை ஈடுகட்டும்.

உத்திகோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு பல்வேறு விரயமான செலவுகளை மனமின்றி செய்திருப்பீர்கள். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். கல்வித்துறை, பாங்க் நிதி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் புதிய செயல்திறன் பெற்று நிர்வாகத்திடமும் ஊழியர்களிடமும் நற்பெயர் பெறுவார்கள்.

சுக செளகரிய வாழ்க்கைகள் முன்பு இருந்ததைப் போலவே குறைவு ஏதுமின்றி தொடரும் . பூர்வ புண்ணிய பலன்கள் தகுந்த நேரத்தில் கைகொடுக்கும்.

எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்வதால் சிறு சிறு இறக்கங்கள் உருவாகும். அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை அட்டவணை போட்டு  செயல்படுத்தி வந்தால் பதட்டமில்லா மனநிலை பெறலாம். தொழில் வகையில் உயர்வான நிலைகள் உண்டு.

தொழிலதிபர்கள்: நோட்டுப் புத்தகம் தயாரிப்பவர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் புதிய நண்பர்களின் ஆலோசனையினாலும் செயல் உதவியினாலும் தொழில் வளர்ச்சி பெறுவார்கள். பச்சை ரத்தினக்கற்கள் பதித்த ஆபரணங்களை உருவாக்கி விற்பனைக்குத்தரும் தொழில் நடத்துபவர்கள் புதிய தொடர்புகளை பெறுவார்கள். பர்னிச்சர் செய்யும் தொழிலதிபர்கள் அதிக ஆர்டர்கள் பெற்று தொழிலில் சிறப்பு பெறுவார்கள். சந்தோஷமான மனநிலையில் தெய்வ வழிபாடுகள் நடக்கும். சமூகத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும்.

வியாபாரிகள்: எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். காகிதப்பொருள்கள் பயன்படுத்தி உருவாக்கப்படும் பொருள்களை வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம்  காண்பார்கள்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.  அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். நற்பெயரும் நற்புகழும் பெறுவீர்கள். வீடு மனை வாகன யோகங்கள் சுமாரான பலனைத்தரும்.கடன் மற்றும் எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் வெற்றிபெறும்.

மாணவர்கள்: கணிதம்,  வருமானவரி, வரவு செலவு தணிக்கை, நிர்வாகம்,  ஒவியப்பயிற்சி பெறும் மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணயவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு உருவாகும். நண்பர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். தந்தை - மகன் உறவு நிலை சுமூகமாய் இருக்கும்.

பெண்கள்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள் . அரசு மற்றும் தனியார் துறைகளிளல் பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேத்துடன் செயல்பட்டு மன நிறைவு பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் வளர்ச்சி பெற்று புதிய சக்தியை உருவாக்கித்தரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். வீட்டை அலங்காரம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆடை ஆபரணச் சேர்க்கை நிச்சயம் உண்டாகும்.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது. பத்திரிகை தொழில் சார்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.

பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். குழந்தைகள் மற்றும் தம்பதிகளின் உடல் நலனில் அக்கறை காட்டவும். எலும்பு சம்பந்தப்பட்ட ரோகம் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. 

உத்திரம் - 2, 3, 4

இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.  குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

ஹஸ்தம்

இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டுவது உங்களுக்கு மன நிம்மதி ஏற்படுத்தித் தரும். பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக வியாபாரிகளுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.

சித்திரை - 1, 2

இந்த ஆண்டு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடலாம். பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் காலமிது. கடின உழைப்பும், புத்தி சாதுர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. உங்கள் சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. ஆனாலும் பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்

முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: புதன்கிழமை தோறும் ஐயப்பனுக்கு அரளிமாலை சாற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் ஸ்ரீமஹாவிஷ்ணவே நம:”.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு

அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com