ஜோதிட கேள்வி பதில்கள்
என் மகள் ஆடிட்டர் படிப்பை நல்லபடி முடிப்பாரா? வேலை வாய்ப்பு, ஆரோக்கியம், எதிர்காலம் எப்படி இருக்கும்? நீண்ட காலமாக வீடு கட்ட முயற்சித்து வருகிறேன். எப்போது அமையும்? உடல்நிலை, எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?- ரவிச்சந்திரன், தேனி
உங்கள் மகளுக்கு ஆடிட்டர், வழக்கறிஞர், மேலாண்மைத்துறை படிப்புகள் ஏற்றதாக அமைகிறது.
உங்கள் மகளுக்கு ஆடிட்டர், வழக்கறிஞர், மேலாண்மைத்துறை படிப்புகள் ஏற்றதாக அமைகிறது. தொழில் ஸ்தானாதிபதி பாக்கியாதிபதியுடன் இணைந்து குருபகவான் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கும் கேந்திரம் பெற்றிருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஆரோக்கியமும் சீராகவே தொடரும். மற்றபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஆயுள், ஆரோக்கியம் ஆகிய இரண்டும் நன்றாகவே உள்ளது.