உங்களுக்கு ரிஷப லக்னம். தற்சமயம் லாபாதிபதியின் தசை நடக்கிறது. இதன் பிற்பகுதியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, இடமாற்றம் இரண்டும் கிடைக்கும். அதாவது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு கிடைக்கும். நீங்கள் ஆசைப்படும் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதற்காக பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். உங்கள் மகளுக்கு லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி மற்றும் தர்மகர்மாதிபதிகள் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் அவர் விரும்பும் துறையில் சாதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலையில் சிறப்பான நிலையை எட்டி விடுவார். உங்கள் மனைவிக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கவேண்டிய ஊதிய பாக்கிகள் கிடைக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்திற்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.