உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்மராசி. தற்சமயம் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடப்பது சிறப்பு. அவருக்கு லக்ன சுபர்கள் களத்திரம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது பெரிய குறை என்று கூறமுடியாது. அதேநேரம் இதற்கு ஏற்ற சமதோஷம் உள்ள பெண்ணைச் சேர்க்க வேண்டும் என்று கூறிச் கொள்கிறோம். அதனால் அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல பணியில் உள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மணவாழ்க்கையில் எந்த பாதிப்பும் உண்டாகாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.