தொழில் ஸ்தானாதிபதி தர்மாதிபதியுமாகி தர்மகர்மாதிபதி யோகத்தைப் பெற்று நீச்சமடைந்து அந்த வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவானுடன் பரிவர்த்தனை அடைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். அந்த காலத்திற்குப்பிறகு கடன் பிரச்னைகள் தீர்ந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.