உங்கள் மகனின் ஜாதகப்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று பாக்கியாதிபதியை பார்வை செய்வது சிறப்பு. அதோடு களத்திர ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எதிர்காலம் சிறப்பாக அமையும்.