என்னுடைய இரண்டு மகன்களுக்கும் நல்ல உத்தியோகம் எப்போது அமையும்? திருமணம் தாமதமாகிறது. எப்போது கைகூடும்? - வாசகர், ராமநாதபுரம்
உங்கள் மூத்த மகனுக்கு சிம்ம லக்னம், மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் புதபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய அஷ்டமாதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் குரு மஹா தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும்.
உங்கள் இரண்டாம் மகனுக்கு சிம்ம லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். தொழில் ஸ்தானத்தில் சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் திக்பலம் பெற்றிருப்பது சிறப்பு. தொழில் ஸ்தானாதிபதி களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்று தற்சமயம் தசையை நடத்துகிறார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பான நிரந்தர உத்தியோகம் கிடைத்துவிடும். இன்னும் இரண்டாண்டுகளுக்குப்பிறகு திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.