ஜோதிட கேள்வி பதில்கள்
எனக்கு திருமண யோகம் எப்போது அமையும்? - சத்யநாராயணன், சென்னை
உங்களுக்கு ரிஷப லக்னம், சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு.
உங்களுக்கு ரிஷப லக்னம், சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணியாதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு. இதற்கு மஹாவிஷ்ணு மஹாலட்சுமி யோகம் என்று பெயர். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான ருசக யோகம் உண்டாகிறது. தர்மகர்மாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப்பிறகு திருமணம் கைகூடும். லாபாதிபதியின் தசையாக இருப்பதால் பிற்பகுதி நன்றாக அமையும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.