உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி. கல்வி ஸ்தானாதிபதி கல்வி ஸ்தானத்தில் உச்சம் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதிக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். பாக்கியாதிபதியும் குருபகவானும் இணைந்திருப்பது சிறப்பு. மேலும் புதபகவானுக்கு குருபகவானின் பார்வைக் கிடைப்பதும் சிறப்பு. அதனால் அவரை கணினி அல்லது கணிதம் சம்பந்தப்பட்ட துறைகளில் படிக்க வைக்கலாம். படிப்பு முடிந்தவுடன் தனியார்த் துறைகளில் நல்ல வேலை கிடைத்துவிடும். உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு அல்லது அரசு சார்ந்த உத்தியோகம் அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.