உங்கள் மகனுக்கு துலாம் லக்னம். களத்திர ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றிருக்கிறார். சுகாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் தொழில் ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கத்தொடங்கியுள்ளதால் அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.