உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், விருச்சிக ராசி. தொழில் ஸ்தானாதிபதி நீச்சபங்க ராஜயோகம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகமான கேதுபகவான் இருப்பதும் சிறப்பு. தற்சமயம் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் புக்தி நடக்கிறது. அதனால் அவருக்கு இந்த ஆண்டே நிரந்தர உத்தியோகமும் திருமணமும் கைகூடும். மற்றபடி புத ஆதித்ய யோகம், சசமஹா யோகம், அஷ்டமஹா நாகயோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.