உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. இதனால் உத்தியோகம் சிறப்பாகவே செல்லும் என்று புரிந்துகொள்ள வேண்டும். சுக ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஏழாமதிபதியையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் தனியார் துறையில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.