உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி. தொழில் ஸ்தானத்தில் ராகுபகவானும் தொழில் ஸ்தானாதிபதி லாப ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பது சிறப்பு. தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அவருக்கு அவர் படித்துள்ள பொறியியல் துறையிலேயே உத்தியோகம் உடனடியாக கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.