உங்கள் மாணவிக்கு வலுவான ஜாதகமாகவே அமைகிறது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி. தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அவருக்கு இந்த ஆண்டே படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். இறுதிவரை பெற்றோருக்கு ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப் பெருமானையும் வழிபட்டு வரவும்.